‘‘சின்னவயதிலிருந்தே புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தது. ஆனால் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கப்போனபிறகு அங்கு கிடைத்த தொடர்புகள் மூலமாக புகைப்படக் கலையில் என்னுடைய அறிவு விசாலமடைந்தது.'' என்கிற ஜெயந்த் அனுரஞ்சன் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறவர். சென்னையில் இயங்கும் வீக்கெண்ட் கிளிக்கர்ஸ் குழுவில் தொடர்பு ஏற்பட்ட பின்னர் தன்னுடைய திறமையும் பார்வையும் மேலும் செழுமை அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் எல்லாவகையான புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டிருந்தார். வனவிலங்குகள், நிலப்பரப்புகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. இப்போது கறுப்பு வெள்ளை புகைப்படங்களில் இவரது கவனம் லயித்திருக்கிறது.
பயணங்கள், மனிதர்கள் - இந்த இரண்டு விஷயங்களில்தான் ஒரு புகைப்படக் காரனாக நான் ஆர்வம் காட்டுகிறேன். நான் மனிதர்களைப் படம் பிடிக்கும்போது வெறும் உடலை மட்டும் காட்டாமல் அவர்களுக்கு ஆத்மா உண்டு என்பதையும் காட்டவிரும்புகிறேன்.
ஆகஸ்ட், 2016.